காத்மண்டு

நேபாளத்தில் இன்று ஹெலிகாப்டர் மலையில் மோதி உண்டான விபத்தில் அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் உள்ளிட 7 பேர் மரணம் அடைந்தனர்.

இன்று நேபாள நாட்டு சுற்றுலா அமைச்சர் ரபீந்திர அதிகாரி மற்றும் அந்தத் துறை அதிகாரிகள் 6 பேர் இன்று தப்ளேஜங் நகரில் இருந்து பதிபாரா பகுடியில் உள்ள கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் பதிபாரா பகுதியில் உள்ள மலை மீது ஹெலிகாப்டர் சென்ற போது அங்குள்ள மக்கள் திடீரென புகை மண்டலம் உருவானதை கண்டு அதிர்ந்தனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அதிகரிஅக்ளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது ஹெலிகாப்டர் மலையில் மோதி முழுவதுமாக எரிந்து காணப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அமைச்சரும் மற்றவர்களும் உடல் கருகி உயிரழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இந்த தகவலை ஒட்டி நேபாள பிரதமர் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார்.

தப்ளேஜங் மாவட்ட ஆட்சியர் அனுஜ் பண்டார், “பதிபாரா பகுதியில் ஹெலிகாப்டர் சென்றபோது, திடீரென மிகப்பெரிய சத்தத்துடன் கூடிய தீப்பிழம்பு புகை ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அங்குச் சென்று பார்த்தபோது, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருந்தது. அதிகாரிகள், தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.