பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் வெங்கையா நாயுடு முதலிடம்

டில்லி:

பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது.

இதில் ஆளும் பா.ஜ சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதை தொடர்ந்து அடுத்த மாதம் 5ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.

ஆனால் பா.ஜ வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளராக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால், இப்போது வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் உயர் மட்டகுழு கூட்டம் நடந்து வருகிறது. தென் இந்தியாவில் மேலும் பலம் சேர்க்கும் விதமாக வெங்கையா நாயுடுவை களமிறக்கலாம் என கூறப்படுகிறது.


English Summary
nenkaiyah naidu is in first place of bjp vice president candidate list