செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

ஆனால் திரைப்படம் வெளியாகாமல் நாட்கள் ஓடின. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது வேற விளையாட்டு எனத் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

இந்நிலையில் படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடித்து கொலை செய்வது போல் இருக்கும் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.