மதுரை:

நிதி பற்றாக்குறை காரணமாக, மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துடன் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் இணைக்கப்படுவ தாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறிப்பிட்டிருப்பதாவது,

அரசு போக்குவரத்துக் கழகங்களின்  நிதிப்பற்றாக்குறை காரணமாக செலவுகளை எதிர் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக , நெல்லைப் போக்குவரத்துக் கழகத்தை, மதுரைப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கலாம் என கடந்த  2016ம் ஆண்டே அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  இரு போக்குவரத்து கழகங்களும் இணைப்பது தொடர்பாக  6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த குழுவினர்  நெல்லை போக்குவரத்துக் கழகத்தையின் நிலையை ஆய்வு செய்து, அதனை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கலாம் என பரிந்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன்படியே தற்போது  இரு போக்குவரத்துக் கழகங்களும்  இணைக்கப்படுவதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.