சென்னை:

லேசிய நாட்டுக்கு கூலி தொழிலுக்காக சென்று, அங்கு காண்டிராக்டர்களிடம் சிக்கிய நெல்லையை சேர்ந்த 49 தொழிலாளிகள், அவர்களை  மீட்க உதவியாக இருந்த திமுக எம்.பி.கனிமொழிக்கு நன்றி தெரிவித்தனர்.

கனிமொழியிடம் மனு கொடுத்த தொழிலாளர் குடும்பத்தினர் (பைல் படம்)

நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையைச் சேர்ந்த 49 பேர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு மலேசியாவில் மின்சார கோபுரம் அமைக்கும்  பணிகளுக்காக  சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் பணி செய்த நிறுவனம் அவர்களை கொடுமைப்படுத்தி அடிமையாக வைத்திருந்தது.

வேலைக்கு சென்றவர்களிடம் இருந்து  எந்தவொரு தகவலும் வராததால்  அவர்கள் குடும்பத்தினர் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் தொழிலாளி ஒருவர் தாக்கள் இங்கு கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.   இதுகுறித்து, அவர்கள் குடும்பத்தினர் நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதுபோல   நெல்லைக்கு வந்த கனிமொழியை சந்தித்து, அவர்களை மீட்க மனு கொடுத்தனர்.

அவர்களுக்கு உறுதியளித்த கனிமொழி, இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசியுட்ம, நேரடியாக மலேசிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டும் விசாரித்து, அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட  நெல்லை தொழிலாளர்கள் 49 பேரும் நேற்று சென்னை வந்தடைந் தனர்.  ஆனால், அவர்கள் தமிழக அரசால்தான் மீண்டுவந்ததாக, அவர்களை அமைச்சர் ஜெயக் குமார் உள்பட அதிகாரிகள் சென்னை விமான நிலையம் சென்று சால்வை போர்த்தி வரவேற்றனர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தமிழகஅரசின் முயற்சியால்தான் நீங்கள் மீண்டு வந்துள்ளீர்கள் என்று கூறினார்.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அவர்கள், நாங்கள் திமுகஎம்.பி. கனிமொழியின் உதவியால் தான் மீட்கப்பட்டோம்.  என்றவர்கள், எங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை என்று கூறி விட்டு, தங்கள் குடும்பத்தினருடன் சென்றனர்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்தை அமைச்சர் அதிகாரிகள், அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.