நெல்லை

நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் தன் மகளுக்கு வரதட்சனை கொடுமை  நடப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

11900ம் ஆண்டு முதல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால்,  நடத்தப்படுகிறது. இங்கு ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது.  தற்போது இக்கடையை மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார்.

இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா தனது தாயுடன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது  கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டதாகவும் கனிஷ்கா தெரிவித்துள்ளார்.  ஆயினும் தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங்,

பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார். ஆகவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.