திருநெல்வேலி:” நெல்லை என்றே நாவில் நீர் ஊரும். அந்த அளவிற்கு பிரபலமானது அல்வா. இந்த அல்வா தயாரிப்பும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தடை பட்டுள்ளது.

நெல்லையின் பிரபலமான அல்வா தயாரிப்பு நிறுவனமான சாந்தி சுவிஸ்ட்ஸ் நிறுவனம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அல்வா தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விரைவில் விறகுகளைக்கொண்டு அல்வா தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது., மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என ‘கெயில்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வணிக சிலிண்டர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலியில் உள்ள அல்வா கடைகளில் இனிப்பு வகைகளின் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான ஹோட்டல், டீக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான டீக்கடைகள் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும், ஹோட்டல்கள் விறகு அடுப்புகளுக்கும் மாறியுள்ளன. குறைந்த வகை உணவுப் பட்டியலுடன் இயங்கி வருகின்றன
.இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகளில் அல்வா, பால்கோவா தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பு மூலம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]