நெல்லை,
நில மோசடி வழக்கில் ஆஜராகாத நெல்லை கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்படு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நில மோசடி வழக்கில் ஆவனங்கள் தாக்கல் செய்யாத வழக்கு காரணமாக நெல்லை உரிமையியல் நீதி மன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
நெல்லை டவுண் பகுதியில் உள்ள லட்சுமி தியேட்டர் எதிர்புறம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை போலி ஆவனம் மூலம் கடந்த 2010 ஆண்டு சிவசுப்பிரமணியன் என்பவர் கட்டிடம் கட்டிவிட்டார்.
இதுகுறித்து. ஆதினத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நெல்லை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்கு தொடர்பான ஆவனங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் நெல்லை கலெக்டர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கெங்கராஜ் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் , நேற்றைய விசாரணையின்போது, நெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
இது கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.