நேற்று மாலை விசாகப்பட்டினத்தில் IPL 37–வது ஆட்டம் ஐதராபாத் சன் ரைசர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடித்து ஆடியதால் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பான தொடக்கம் அளித்த டேவிட் வார்னர் 48 ரன்னில் அவுட் அக அடுத்து களம் கண்ட கனே வில்லியம்சன் சொற்ப ரன் எடுத்து அவுட் அனார் அடுத்து வந்த யுவராஜ்சிங் அதிரடியாக ஆடினார் 39 ரன்கள் எடுத்த ‘ஹிட் விக்கெட்’ முறையில் அவுட் அனார். 20 ஓவர் முடிய 177 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 82 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
Nehra
களமிறங்கிய மும்பை அணி அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா(5), பர்திவ் படேல் (0), ராயுடு(6), பட்லர்(2) ஆகியோரை நெஹ்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் வேக பந்துக்கு அவுட் ஆகி வெளியேற்றினார். மும்பை வீரர்கள் தொடக சரிவில் இருந்து மீள முடியவில்லை. மும்பை அணி 16 ஓவர் இல் 92 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் தோல்வி பெற்றது.
ஐதராபாத் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை 15 ரன்கள் கொடுத்து வீழ்த்திய நெஹ்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.