சென்னை:
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET – UG) தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் விண்ணப்பித்துள்ளனர். 19 ஆயிரத்து 867 மாணவர்கள் நீட் தேர்வைத் தமிழில் எழுத விண்ணப்பித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளிலிருந்து 11 ஆயிரத்து 236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடைபெறுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகக் கூடுதல் நீட் மையங்கள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், அனுமதி அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது எனத் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel