டில்லி:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த நிலையில், இன்று தேர்வு  முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு பிரிவினருக்கும்  கட்ஆப் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என நம்பப்படுகிறது.

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  மேலும், மருத்துவ கவுன்சிலின் இணையதளமான mcc.nic.in -லும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் http://ntaneet.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்ற பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளம் ஓபன் அனதும், அங்கு காணப்படும்  நீட் 2019 தேர்வு முடிவுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் தங்களது பதிவு எண்ணை கொடுத்து சப்மிட் (submit)-ஐ கிளிக் செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும். அதனை பதிவிறக்கம் செய்யலாம்.

நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த விபரங்கள்:

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  மெரிட் பட்டியலோடு ரேங்க் பட்டியலும் தயாரிக்கப்படும், மாணவர்கள் தங்களது ரேங்க்-க்கு ஏற்றது போல கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

பொதுப்பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களை பெற முடியும்.

எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை பெற வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

இந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியை பின்னர் அறிவிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்வுக்கான ஓ.எம்.ஆர். விடைத்தாள் என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.