புதுடெல்லி:
ந்தியா முழுவதும் சுமார்  10 லட்சம் மாணவர்கள்  எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவ துறைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவை களிலும் நிறை வேற்றப்பட்டன. இதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்வி படிக்க “நீட்” (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது.
NEET
இந்த வருடம்  மருத்துவப்படிப்புகான இடங்களை தேர்வு செய்ய நடைபெறும்  “நீட்” எனப்படும் தகுதித்தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது. அதற்கான ரிசல்ட் நாளை வெளியாகிறது.
இந்த வருடம் நீட் தேர்வுகள்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.  முதலில் நடைபெற்ற தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.  மே 1ம் தேதி தேர்வு நடைபெற்றது. அடுத்த தேர்வு கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இதில் 4 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள் மற்றும் தரவரிசை பட்டியலை www.aipmt.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு மற்றும் வரிசை எண்கள், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் இரண்டு கட்டத் தேர்வுகளை எழுதியிருந்தாலும் ஒரே முடிவு மற்றும் தரவரிசை பட்டியல்தான் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ­­­