டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவர்களின் தேவையை கருதி, முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
கொரோனா 2வது அலை பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன், ஆக்சிஜன் உள்பட மருந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல மாநிலங்களில், பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வும் வைக்கப்பட்டது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏப்ரல் 16ந்தேதி அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்படுவதால், யுஜி மருத்துவர்களை பணியமர்த்தும் வகையில் பிஜி நீட் தேர்வை மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மூலம் மாஸ்டர் ஆஃப் சர்ஜரி (எம்எஸ்), 24,360 மருத்துவ மருத்துவர் (எம்.டி), மற்றும் 922 பி.ஜி டிப்ளோமா இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.