சென்னை,

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்ற தமிழக முதல்வர், நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு கோரி பிரதமர் மோடியை, நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அறையில் சந்தித்து பேசினார்.ஹ

ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக, தமிழக அமைச்சர்கள் குழுவினர் டில்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், அருண்ஜேட்லி போன்றோர்களை சந்தித்து வருகின்றனர்.

அப்போது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குகோரும் சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத்தர வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்தார். மேலும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தர வும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.