சென்னை: நீட் விவகாரம் மற்றும் ஆளுநரின் கார்மீது தாக்குதல் எதிரொலியாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை அனுமதி  அளிக்காத நிலையில், ஆளுநரின் நிகழ்ச்சிகளை தமிழகஅரசு புறக்கணித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்திலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கருப்புகொடி ஆர்ப்பாட்டம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, தமிழக டிஜிபிக்கு நேரடியாக கடிதம் எழுதி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் ரவி இன்று டெல்லி அவசரமாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.  ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 7ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி சென்ற நிலையில் மீண்டும் இன்று டெல்லிக்கு பயணம்  மேற்கொண்டு திரும்பிய நிலையில், இன்று மீண்டும் திடீரென டெல்லி செல்வது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.