சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கார்மீது தாக்குதல் மற்றும் தடுத்த நிறுத்த முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது  பிரிவு 124ன் கீழ் (crowd attract section 124) நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி அவசர கடிதம் எழுதி உள்ளர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை நிகழ்ச்சிக்கு சென்ற அளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தின. அப்போது ஒரு கூட்டம் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்த ஒடினர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால்,  வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீச தொடங்கினர். எனினும் ஆளுநர் அவர்களின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாக சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து  தெரிவித்திருந்தார். அதே வேளையில் திமுக கூட்டணி கட்சியான விசிகவும், கருப்பு கெடிகளை வீசிய செயல் ஏற்புடையது அல்ல என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

ஆனால், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல்  இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் வாகன அணிவகுப்பில்  கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து,  ஆளுநர் ஆர்.என்.ரவியை பணிசெய்ய விடாமல் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் காரை மறிக்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது  ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி, விஸ்வேஸ் சாஸ்திரி ஐபிஎல், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ள, 124-வது பிரிவு என்பது, குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல் அல்லது அவர்களது சட்டப்பூர்வ பணிகளை செய்யவிடாமல் தடுத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களை செய்வோருக்கானது.  இந்த சட்டப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிவை சுட்டிக்காட்டி,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பணிசெய்ய விடாமல் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி.சாஸ்கிரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில்,  தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில் ஆளுநர் எங்கு சென்றாலும் அவருடன் நான் பாதுகாப்பிற்கு சென்று வருகிறேன். அந்தவகையில் நேற்று மாண்புமிகு ஆளுநர் மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதினம் நிகழ்ச்சிகாக சென்றார். அவருடைய வாகனம் காலை 9.30 மணிக்கு திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. அந்தக் காரில் நான் முன் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஆளுநர் அவர்கள் பின்பக்கத்தில் அமர்ந்தார். எங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கான்வாய் கார் சென்றது. சுமார் 9.50 மணியளவில் ஏவிசி கல்லூரி அருகே கூடியிருந்தவர்கள் சிலர் ஆளுநரின் கான்வாய் வாகனத்தை நோக்கி நெருங்கி வந்தனர்.

மேலும் அவர்கள் ஆளுநர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அத்துடன் அவருடைய வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீச தொடங்கினர். எனினும் நல்வாய்ப்பாக ஆளுநர் அவர்களின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாக சென்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்

ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை – ஏ.டி.ஜி.பி