டில்லி:

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை யில்  திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,  ‘நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என  வலியுறுத்தியவர்,  தமிழக கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பிஎஸ்., படிப்பில் சேர நீட் தேர்வு தடையாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆகவே, மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறியவர்,  நீட் தேர்வு தோல்வியால் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்  என்றும்,  நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.