நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! சிபிஎஸ்இ தகவல்!

டில்லி,

கில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ மாணவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்ற சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவு ஏற்ககனவே  ஜூன் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுகுறித்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்குகள் காரணமாக தேர்வு முடிவு  வெளியானதில் தாமதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் விநியோகம் செய்யாததால், நீட் தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதி மன்றம், நீட் தேர்வு வெளியிட தடை விதித்திருந்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சிபிஎஸ்இ வாரியம் மனு தாக்கல் செய்தது. அதையடுத்து, தடையை நீக்கி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து  மருத்துவக் கல்லூரி களில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி, விடைகள் 15-ம் தேதி வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து நீட்  நுழைவுத் தேர்வு  முடிவுகள் இன்று வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அறிவித்து உள்ளது. ஆனால், எப்போது வெளியாகும் என்று நேரம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

தேர்வு முடிவுகள் அறிய வேண்டிய முகவரி:

cbseresults.nic.in ,    cbseneet.nic.in. 


English Summary
Neet Exam Results Today! CBSE information!