டில்லி:

நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம், 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் விலக்கு அளிக்க மறுத்து, நீட்டுக்கான அப்ளிகேஷன் பதிவு செய்ய  5 நாட்கள் கூடுதல் அவகாசம் மட்டுமே கொடுத்தது.

இந்நிலையில், நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வை தள்ளி வைக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.