சென்னை:

சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இதன் காரணமாக, தமிழகத்தில்  நீட் தேர்வை அதிமுக அரசு எதிர்க்கும் என்று எடப்பாடி கூறிய பொய் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவோம் என்று கூறி வாக்கு வாங்கிய எடப்பாடி, ஏற்கனவே நீட் தேர்வை எதிர்ப்போம் என்று கூறிய வந்த நிலையில், தற்போது,   ‘சித்தா..ஆயுர்வேதம்..யுனானி’ போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மக்களையும், மாணவ மாணவிகளையும் எடப்பாடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் இந்தாண்டு முதலே சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதலே முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலின்போது, திமுக, அதிமுக  கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், திமுகவின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில், மாநில அரசுகள் விரும்பாத பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால், பாஜக அப்படி எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்காத பட்சத்தில், அதிமுக கடந்த ஏப்ரல் மாதம்  8ந்தேதி வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில்,  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்க ளில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.