சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்து  தமிழக சட்டசபையில்  முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நேற்று கேரள மாநில சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பாண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவைகளால் நீட் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு குறித்து விவாதிக்க திமுக உள்பட எதிர்க்கட்சிகள்நோட்டிஸ் வழங்கி உள்ளன.

இதற்கிடையில் நேற்று (ஜூன் 27) கேரள சட்டப்பேரவையில்,  நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்து  தமிழக சட்டசபையில்  முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து,  நீட் முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ,  மத்தியஅரசு  2017-ம் ஆண்டு நீட் தேர்வை  கட்டாயமாக்கியது. *நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.  நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது. மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது. * முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கருணாநிதி. *நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.  நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன. நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. *அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.  நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வு அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது என  கூறியதுடன், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக மாணவர், மருத்துவர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன, நீட் தேர்வை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு, மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தையும் ரத்துசெய்தவர் கலைஞர்.

நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு கூறினார்.