சென்னை,
அதிமுக அரசின் பலவீனம் காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது என்று தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதுதான் முதல் முறையாக நீட் தேர்வு நடந்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசு கூறியதாவது,
நீட் தேர்வு நடப்பதற்கு காங்கிரஸ், தி.மு.க.தான் காரணம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி செய்தபோதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்த போதும் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போதுதான் முதல் முறையாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்துள்ளது. இதற்கு அ.தி.மு.க.வின் பலவீனமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை கடுமையாக சோதனை செய்தது கண்டனத்துக்குரியது என்றும்,
தமிழகத்தில் பா.ஜனதா பின் வாசல் வழியாக காலூன்ற முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை உடைத்து ஒரு அணியை தன்பக்கம் இழுக்க முயற்சித்தனர். ஆனால், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு அணிகளையும் இணைக்க முயற்சிக்கிறது என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க மற்றும் மீட்டெடுக்க என் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த குழுவின் முதல் நடவடிக்கையாக தண்டையார்பேட்டை 42-வது வார்டு இரட்டைகுழி தெருவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை இடத்தை காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும், காங்கிரசுக்கு தமிழகத்தில் குறைந்தபட்சம் ரூ.500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. சொத்துக்களை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி யிடம் தெரிவித்தபோது அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
அதை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.