இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டதாக கூறினார். எப்படியாவது நீட் தேர்வு தள்ளி வைக்கப்படாதா என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தேர்வு நடத்தப்படும் என்று கூறி உள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போதைய நிலைக்கு ப.சிதம்பரத்தின் மனைவி நளினிதான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தவர், தற்போது காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார், மக்கள் அதனை தெரிந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் வாதாடி, நீட் தேர்வை நாடுமுழுவதும் அமல்படுத்த முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.