நாமக்கல்:
நீட் கோச்சிங் பெற அதிக கட்டணம் வசூலித்து முறைகேடு செய்ததாக, நாமக்கல் கிரின் பார்க் பள்ளியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.30 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக நடந்து வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நாமக்கல் அருகே போதுப்பட்டி போஸ்டர் காலனியில் கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர், மருத்துவம் படிக்க விரும்பி நீட் கோச்சிங்கில் சேர்ந்து,அங்கேயே தங்கி படித்து வருகிறார்கள்.
நீட் கோச்சிங்குக்காக அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அரச நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, கிரின் பார்க் பள்ளி மீது ஏராளமான புகார்கள் குவிந்தது. இதைத்தொடர்ந்த அந்த பள்ளி மற்றும் அந்த பள்ளி நடத்தும் நீட் கோச்சிங் சென்டர்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
கிரின் பார்க் பள்ளி, நீட் பயிற்சி மையம், தாளாளர் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் தொடர் சோதனை நடைபெற்று வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் சோதனை நடைபெற்றது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையின்போது, பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்ததற்கான விவரங்கள், அதற்கான லெட்ஜர்கள் கிரின் பார்க் பள்ளி இயக்குனர்களில் ஒருவரான குருவாயூரப்பன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கிரின் பார்க் பள்ளி நிர்வாகத்தின்ர், 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறி யப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கலையரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அதை பறிமுதல் செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, கலையரங்கத்துக்கு சீல் வைத்துடன், கிரீன் பார்க் பள்ளி இயக்குனர்கள் குருவாயூரப்பன், மோகன், குணசேகரன், சுப்பிரமணி ஆகியோரை பள்ளி மற்றும் அவர்களின் வீடுகளில் வைத்து வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போதுஅவர்களின் வங்கி கணக்குகளை சரிபார்த்த அதிகாரிகள்,பல்வேறு ஆவனங்களில் கையெழுத்து பெற்றனர்.