சென்னை:

ருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியலை, உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்டது.

தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அதன் விவரங்களை சென்னையில்  வெளியிட்டார்.

தமிகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக,  நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிகம் உள்ளாக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வு அடிப்படையில்  தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது,.

இந்த பட்டியலில்,  ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர் ஆவார்.

கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த சையத் 651 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாளையே கலந்தாய்வு தொடங்குவதால், அது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தொலை பேசியில் அழைப்பு விடுக்கப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்கள் குறுந்தகவல் மூலமும் அனுப்பப்படும் என்று ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கு நாளை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்தத் தகவல் தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முதல் 20 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் 5 இடங்களைப் பிடித்தனர். 6 முதல் 20 இடங்களில் மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் பிடித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.