சென்னை,

மிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்  நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடை பெற்றது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து பிளஸ்2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி, மருத்துவ படிப்பு கிடைக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழக முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழவதும் பெரும்பாலான அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.