போலந்தில் உள்ள பிட்கோசிசில், 20 வயதிற்குட்பட்ட இளையோருக்கான உலகக்கோப்பை  தடகளப்போட்டி நடைப்பெற்று வருகின்றது.
தடகளப் போட்டிகளில் ஒன்றான ஈட்டி எறிதல் போட்டி சனிக்கிழமையன்று மாலை நடைப்பெற்றது. இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த உலகக்கோப்பை போட்டியில் பங்குப் பெற்றார்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் ஈட்டியை 86.48 மீட்டர் தூரம்  எறிந்து  நீரஜ் சோப்ரா  தங்கம் வென்றார்.
neeraj
இதன் மூலம், இவர் இரண்டு புதியச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
முதல் சாதனை, இந்தியாவின் இளையோர் மற்றும் மூத்தோர் அணி இரண்டையும் சேர்த்து, ஈட்டி எறிதலில் அதிக தூரம் எறிந்தவர் எனும் சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் லாட்வியாவைச் சேர்ந்த வீரர்  சிகிஸ்முன்ட் சிர்மைஸ் படைத்திருந்த 84.69 மீட்டர் ஈட்டிஎறித ல் தூரச் சாதனையை, கிட்டதட்ட இரண்டு மீட்டர் அதிகதூரம் ஈட்டியை எறிந்து முறியடித்துள்ளார் நீரஜ் சோப்ரா  .
இரண்டாவது சாதனை: உலகக் கோப்பை  தடகளப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்   இதுவரை  தங்கம் வென்றது இல்லை.
இந்தப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தடகளத்தில் உலகச் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் நீரஜ் சோப்ரா.
கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டதன் விளைவாய், இந்தச் சாதனையை எட்ட முடிந்தது.” என்றார் சோப்ரா.
இந்தப் போட்டியில் மூன்று முறை ஈட்டி எறிந்ததில், முறையே 79.66, 86.48 மற்றும் 78.36 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ரியோவிற்கு ஏன் தகுதி பெறமுடியவில்லை ?
ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற 83 மீட்டர் தூரம் ஈட்டி எரிய வேண்டும். இதனை ஜூலை 11க்க்குள் எட்ட முடியாததால் இவரால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. புதுதில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஃபெடெரேசன் கோப்பை போட்டியில் காயமடைந்ததால் இவரால் சகஜமாக போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. எனவே, ஒலிம்பிக் வாய்ப்பை இவர் இழந்துள்ளார்.
2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெரோட் பேனிஸ்டர் 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனைப் படைக்கக் காரணமாய் இருந்த அவரது பயிற்சியாளர் கேரி கால்வெர்ட் தான் தற்பொழுது நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியளித்து வருகின்றார்.
அவர், ” நீரஜ் ஒரு இயற்கையான திறமைசாலி. குறைந்த நேரத்தில் ஈட்டியைக் கையை விட்டு எறியும் சூட்சமம் தெரிந்திருப்பதால் இவரால் இன்னும் பல சாதனையைப் படைக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
18 வயதான நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள கான்ட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்.
கிராமப் புறத்திலிருந்து வந்ததால், நீரஜ் சோப்ரா பாட்டியாலா வரும் வரை முழுநேரப் பயிற்சியாளர் இல்லாமலேயே போட்டிகளில் பங்குப்பெற்று வந்தார்.
குறுகியக் காலத்தில்  தொடர்ச்சியாய் தன் தகுதியை வளர்த்துக்  கொண்டார்.
தன்னுடைய 2014 சாதனையான 70.19 மீட்டர், 2015 சாதனையான 81.04 மீட்டர் மற்றும்  குவகாத்தியில் நடைப்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் அதிகப்பட்சமாக 82.23 மீட்டர் எறிந்து இருந்தார்.