ரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் செய்யாதீங்க!

Must read

சென்னை,

மிழக அரசு தற்போது ரேஷன் கார்டை ஸ்மார்ட் ரேஷன் கார்டாக மாற்றி கொடுத்து வருகிறது.

தற்போது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்புவர்கள் எளிதாக திருத்தம் செய்யப்படும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ரேசன் கார்டில் பெயர், முகவர் மற்றும் பிற விவரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் மாற்றம் செய்ய விரும்புவோர் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாமில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று அதாவது 13.05.2017 அன்று காலை 10.00 மணி முதல் 05.00 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.‬‬

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article