புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மதிநுட்பம் வாய்ந்த ஊரடங்கு நீக்க வியூகம் தேவை என்று தெரிவித்துள்ளது எஸ்பிஐ ஆய்வு அறிக்கை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2019-20 காலகட்டத்தில் 4.2% என்பதாக சரிந்தது. இந்த ஆண்டின் ஜனவரி – மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் 3.1% என்ற அளவிற்கு சரிந்தது. இதுதான், கடந்த 40 காலாண்டுகளின் மோசமான சரிவாகும்.
இந்நிலையில் எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறியுள்ளதாவது, “கலந்துரையாடலானது, வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு இடையில் என்பதிலிருந்து வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கு இடையில் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளது.
எனவே, மதிநுட்பம் வாய்ந்த ஒரு ஊரடங்கு வியூகத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த நீண்ட ஊரடங்கு மிக மோசமான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும்.
கடந்த கால அனுபவங்களைப் பார்க்கையில், பொருளாதார சரிவிலிருந்து மீண்டுவர, ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறது அந்த ஆய்வறிக்கை.