சென்னை,

நீட் விலக்கு அவசர சட்டம் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் 3 துறைகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு உடனே நடத்த வலியுறுத்தியும் சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வரும் 22ந்தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும்,  நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. த

மிழக சட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.