கசர்கோடு:

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெரு மழையின்போது, முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்ட காசோலைகள், வரைவுக் காசோலைகளில் பாதிக்கு மேற்பட்டவை வங்கியில் இருப்பு இல்லாததால் திரும்பி வந்துவிட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கசர்கோடு எம்எல்ஏ நெல்லிக்குன்னு கேரள சட்டப் பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன், ரூ. 3.26 கோடி மதிப்புள்ள 395 காசோலைகளும், வரைவு காசோலைகளும் வங்கியில் இருப்பு இல்லாததால் திரும்பி வந்துவிட்டன என்றார்.

அப்போது பேசிய நெல்லிக்குன்னு, காசோலை அனுப்பியதாக 15 நிமிடங்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே சிலர் இப்படி நடந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
எனினும், நிவாரண நிதிக்கு பணமாக மட்டும் ரூ. 2,797.67 கோடி வந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.