லக்னோ:

60 வயதுக்கு மேற்பட்ட இந்து சாமியார்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என உத்திரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


உத்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் பதவிக்கு பல முனைப் போட்டி நடந்தது. இறுதியில் யாரும் எதிர்பாராத விதமாக சாமியார் யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார்.

பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு
கிறார்.

மாடுகளை இறைச்சிக்காக வெட்ட தடை விதித்து, மாடுகள் பாதுகாப்பகம் ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, மாடுகள் அதிகமானதால் பயிர்களை மேய்ந்துவிடுவதாகக் கூறி, அவற்றை அரசு அலுவலக வளாகங்களில்  விவசாயிகள் அடைத்து வருகின்றனர்.

மற்றொரு அதிரடியாக, 60 வயதுக்கு மேற்பட்ட இந்து சாமியார்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.