டெல்லி: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 கோடி கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என நிதிஆயோக்  ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஆயோக் அறிக்கையின்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின், கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின்  எண்ணிக்கை விகிதத்தில் ஒரு செங்குத்தான சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும், கடந்த  2013-14ல் 29.17 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் 2022-23ல் (திட்டமிடப்பட்டது) 11.28 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது , கடந்த 2010ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் 26 கோடி பேர் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.  இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடாகவே இந்தியா இதுவரை இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 30 சதவிதம் பேர் ஏழ்மையில் வசிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு,  ஏழ்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த 2013-14 இல் 29.17% இல் இருந்த ஏழ்மை மக்கள்,  2022-23 ம் ஆண்டு 11.28% ஆகக் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். பீகார், ம.பி., ராஜஸ்தானில் 3.77 கோடி, 2.30 கோடி மற்றும் 1.87 கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பல பரிமாணங்களில் வறுமையானது ஏழைகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது,

நிதி ஆயோக், இந்திய மக்களின் வாழ்வாதாரத்தைக்கொண்டு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியமான பிரிவுகளை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா‘ மக்களின் வாழ்க்கை  12 பிரிவுகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும்

நிதி ஆயோக்கின் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு (MPI) வறுமை விகிதங்களில் குறைவை மதிப்பிடுவதற்கு அல்கிர் ஃபாஸ்டர் முறையைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், தேசிய MPI 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உலகளாவிய MPI 10 குறிகாட்டிகளை உள்ளடக்கியது.  உத்தரப்பிரதேசத்தில், மாநில அளவில், 5.94 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் வறுமை நிலையில் இருந்து முன்னேறி உள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஒவ்வொரு ஆண்டும் 2.75 கோடி பேர் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், ஒன்பது ஆண்டுகளில் 24.82 பேர் வெளியே வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “பல்பரிமாண வறுமையை 1% க்கும் கீழே கொண்டு வர அரசு இலக்கு வைத்துள்ளது, அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று NITI ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்தியா ஒற்றை இலக்க வறுமை நிலையை அடைய உள்ளது என்றும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1996271