இந்தியாவின் மக்கள் தொகை இடைப்பட்ட காலத்தில் அதிகரித்து, 2100ம் ஆண்டு வாக்கில் 109 கோடியாக குறையும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் உலக மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியின் போருது, கடந்த 2017 முதல் உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் மூலம் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்பட 183 நாடுகளுகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும், எதிர்கால மக்கள் தொகை, இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவுடன் 2100ம் ஆண்டுக்குள் இந்தியா, நைஜீரியா மற்றும் அமெரிக்க நாடுகளும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.