லண்டன்
விராட் கோஹ்லி அளித்த விருந்துக்கு சென்றிருந்த விஜய் மல்லையாவை விராட் கோஹ்லி உட்பட எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கி இருந்தனர்
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கியில் வாங்கிய ரூ 9000 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை. வங்கியின் நடவடிக்கைகளுக்கு பயந்து லண்டன் சென்று விட்டார். அவருடைய கடனை திரும்பப் பெற பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன
இந்நிலையில் லண்டனில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை விஜய் மல்லையா நேரில் கண்டு ரசித்தார்.
போட்டியை ஒட்டி விராட் கோஹ்லியின் அமைப்பு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் விஜய் மல்லையா கலந்துக் கொண்டார். ஆனால் அவரை விராட் கோஹ்லி உட்பட எந்த ஒரு வீரரும் கண்டுக் கொள்ளவில்லை. ஒதுங்கியே இருந்தனர். அனைத்து வீரர்களும் விருந்திலிருந்து சீக்கிரமே சென்று விட்டனர்
மல்லையாவுக்கு அழைப்பு அனுப்பியது யார் என தெரியவில்லை. ஆனால் பிசிசிஐ அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில் இது ஒரு நிதிக்காக அரேஞ்ச் செய்த விருந்து எனவும், வேறு யாரேனும் கூட விஜய் மல்லையாவுக்காக பணம் அளித்து விருந்துக்கான அழைப்பை பெற்றிருக்கலாம் எனவும் கூறினார். மேலும், விஜய் மல்லையா வந்ததை கிரிக்கெட் வீரர்கள் விரும்பவில்லை எனவும், அதனாலேயே அவரிடமிருந்து விலகி இருந்து சீக்கிரம் சென்று விட்டனர் எனவும், தவிர யாராலும் விஜய் மல்லையாவை அங்கிருந்து அனுப்ப முடியாது என கூறினார்
முன்பு இந்தியாவில் இருந்தபோது மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி என்பது தெரிந்ததே.