காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பா.ஜ. அரசு மீது சோனியா கடும் தாக்கு!

Must read

 

டில்லி,

லைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய சோனியா, மத்திய பாரதியஜனதா அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.

டில்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில், துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  உள்பட காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும்,   உட்கட்சி தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது,

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிர்வாகத்தில் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது.  இந்தியாவின் மாண்புகளை அழிக்கும் முயற்சியில் பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது.

பொருளாதாரம் மட்டுமல்லாமல், வீழ்ச்சி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவையும் சரிந்து வருகிறது.

எங்கெல்லாம் அமைதி இருந்ததோ, தற்போது அங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பொறுமை இருந்த இடத்தில் அத்துமீறல் நடக்கிறது.  பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்த நிலையில் தேக்கநிலை காணப்படுகிறது.

இந்தியாவின் மாண்புகளையும் கொள்கைகளையும் மத்திய அரசு அழிக்க நினைக்கும் மத்திய அரசிடமிருந்து அதனை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article