ஶ்ரீலங்கா:
ந்தியா – இலங்கை உறவு நிலையானது என்று பிரதமர்  மோடி பேசினார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளை புணரமைக்க இந்தியா பெரும் உதவி செய்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - ரணில்
பிரதமர் மோடி     –                  ரணில்

இதன் அடுத்தக்கட்டமாக 50.61 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வண்டிகளை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த வண்டிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இதற்கான விழா கொழும்புவில் நடைபெற்றது. விழாவில் இந்திய பிரதமர் மோடி அனுப்பிய வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது.
மோடி பேசியதாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலனஸ்  வண்டிகள்  வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என்றார்.
அடுத்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,  பல ஆண்டுகளாக இந்தியா இலங்கை நட்புடன் உறுதியாக உள்ளது. அந்த   உறவை மேலும் நீடிப்போம் என்றார்.