டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 38,628 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 40,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 617 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் குறைந்து வந்த தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் குறைந்த கொரோனா பாதிப்பு இந்த வாரம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,95,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,371 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் மேலும் 40,017 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,55,861 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4,12,153 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 50,10,09,609 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49,55,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]