ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,24,03,1633 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உலக நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது உருமாறிய நிலையில் பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  20,24,03,1633  ஆக உயர்நதுள்ளது.

இதுவரை மரணமடைந்தோர் மொத்தம் எண்ணிக்கை  42,90,441 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18,19,04,215  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 16,204,108 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 95,416 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.