21 வயதுக்கு குறைவானவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் அனுமதியை கட்டாயமாக்குவோம் என்ற பாமக வாக்குறுதிக்கு எதிர்ப்பு

சென்னை:

போலியான காதலுக்கு தீர்வு காண, 21 வயதுக்குள்ளானவர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி பலதரப்பிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.


பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றுவதாக தலித் இளைஞர்கள் மீது பலமுறை பாமக வெளிப்படையாகவே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருக்கும் பாமக, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

21 வயதே பக்குவப்பட்ட வயதாகும். அந்த வயதுக்கு கீழ் உள்ளோர் திருமணம் செய்யும் போது,  பெற்றோரின் ஒப்புதலை வாங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்துவோம்.

இந்த நடைமுறை பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் சுதா ராமலிங்கம் கூறும்போது, “வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமை.
பெற்றோரிடம் திருமணத்துக்கு ஒப்புதல் பெறுவதை விட, நல்ல இணையை தேர்வு செய்ய ஆண்களுக்கும், பெண்களுக்கும் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்” என்றார்.

திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறும்போது, :”21 வயது குறைவான ஆண்கள் திருமணம் செய்யமுடியாது. 18-21 வயது வரையிலான பெண்கள் முடிவு எடுக்கும் திறன் இல்லாதவர்கள் என்று பாமக நினைத்தால், பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கோரலாம்.

நட்பு தவறாகும்பட்சத்தில், பெற்றோர் அனுமதி பெறுவது மட்டும் தீர்வாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: protect the existing family system, பாமக, பெற்றோர் சம்மதம்
-=-