புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் காலமானார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே. இவர் மகாராஷ்டிரா மாநிலம்   பந்தர்பூர் – மங்கள்வேதா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுதது, மருத்துவமனையில் சேர்ந்து  சிகிச்சை பெற்று  குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், அவருக்கு இணை நோய்களால் மீண்டும்  உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.  அதையடுத்து,  புனேவில் உள்ள ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கு வென்டிலேட்டர் மூலம்  தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை  உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பரத் பால்கே எம்எல்ஏவின் மறைவு  மறைவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]