நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசார், இந்தி திரை உலகில் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கண்டறிந்தனர்..
இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே நடிகைகள் தீபிகா படுகோனே, ராகுல் ப்ரித் சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையின் ஜுகு பகுதியில் உள்ள பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் பெரோஸ் நாடியாத்வாலா இல்லத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்..
இந்த சோதனையின் போது பெரோஸ் வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரது மனைவி ஷாபனா சயீத்தை கைது செய்தனர்.
இந்நிலையில் பந்த்ராவில் உள்ள இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால். வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, நாளை (புதன் கிழமை) நேரில் ஆஜராகுமாறு அர்ஜுன் ராம்பாலுக்கும், அவரது தோழி கேபரியேலுக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வேட்டை மேலும் தீவிரமாகும் என்று தெரிகிறது.
– பா. பாரதி