மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் மகன் ஆர்யன்கான் போதைப்பொருளுக்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்து உள்ளது. ஆர்யன்கான் ஒருபோதும் போதைப்பொருள் வைத்திருந் ததில்லை, எனவே அவரது தொலைபேசியை எடுத்து அவரது அரட்டைகளை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து உள்ளது.

நடிகர் ஷாருக கான் மகன் ஆர்யன்கானும், அவரின் நண்பர்களும் கடந்த 2021ம்  ஆண்டு, அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெல்லா குருஸ் சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் கலந்துகொண்டனர். அந்த கப்பல் விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஆர்யன்கான் உள்பட அவரது நண்பர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில்,  ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்து, பின்னர் அக்டோபர் 30ந்தேதி ஜாமினில் வெளியே வந்ததார். இந்த விவகாரத்திர் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, ஆர்யன்கான் வழக்கை இபோதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, ஆர்யன்கான் நிரபராதி என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆர்யன்கான் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தார் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என  தெரிவித்துள்ளது

முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பாக பெரிய அளவில் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவந்தது. அதோடு ஆர்யன் கானை கைது செய்ய ரெய்டு நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்டின் போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.