ஏ.கே.சஜன் இயக்கத்தில் மம்முட்டி – நயன்தாரா நடிப்பில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான படம் `வாசுகி’
குடும்ப பெண்கள், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக காட்டியிருந்தார் இயக்குநர் ஏ.கே.சஜன்.
இந்த படம் தெலுங்கில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வெளியானது. ஆனால் இப்படம் தோல்வியை தழுவியது. இதே படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகி ஃபிலிம் பேர் விருதை வாங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தை பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே ஹிந்தியில் ரீமேக் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.