
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.
நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா, விஜய் டிவியல் சிறப்பு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற நிகழ்ச்சியில் பங்குபெறும் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த ப்ரோமோவில் நடிகை நயன்தாராவை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பேட்டி எடுக்கிறார். அந்தப் பேட்டியில் நயன்தாரா பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக நயன்தாரா தம் கையில் அணிந்திருக்கும் மோதிரம் என்கேஜ்மென்ட் மோதிரமா என்பது பற்றிய விளக்கத்தைக் கூறுகிறார்.
விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு இந்த சிறப்பு நிகழ்ச்சி வெளியாகவிருக்கிறது.
https://www.instagram.com/p/CSY6gWRiPOT/