தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்று ஓணம் கொண்டாடினர் .
பின் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினார் நயன்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளனர். இருவரும் விமானத்தில் இருந்து இறங்கும் விமான நிலைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இருவரும் தங்களது சொந்த விஷயமாகவும் கொச்சினில் சில நாட்கள் கழிப்பதற்காகவும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Cochin 🛩💝 pic.twitter.com/Nudx1iySwT
— Nayanthara✨ (@NayantharaU) June 16, 2021