
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இன்று போட்டியிட்டதையொட்டி பாரம்பரிய உடையான புடவை, வேஷ்டியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பர்யமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]Of the many firsts, this one will always be special! ❤️ pic.twitter.com/eO7S10cLGp
— Rowdy Pictures (@Rowdy_Pictures) February 4, 2021