விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘கனெக்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

கனெக்ட் என்ற படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நயன்தாராதான் நாயகி. உடன் அனுபம் கேர், சத்யராஜ் நடிக்கிறார்கள்.

நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். அஸ்வினின் மாயா, கேம் ஓவர் படங்களைப் போல இதுவும் ஹாரர் படமாக தயாராகிறது.