தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

எல்லோரும் இடது கையில் ஊசி போட்டுக் கொள்ள, நயன்தாரா மட்டும் ஏன் வலது கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்? அதோடு அந்தப் படத்தில் ஊசியும் இல்லை , ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது நர்ஸ் கையில் ஊசி இருக்கிறது என தெரியப்படுத்தியுள்ளார் . இதன்மூலம் நயன்தாரா தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.