உலகில் ஒருவரைப் போல 7 பேர் இருக்கலாம் என்பார்கள். அதிலும் சமூக வலைதளங்கள் பெருகிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான நபர்களை எளிதில் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா போலவே மேக்கப் மூலம் தனது தோற்றத்தை மாற்றியிருக்கும் பெண் ஒருவரின் படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகின்றன.

இதற்கிடையே அச்சு அசலாக நயன்தாரா போலவே ஒப்பனை செய்த, விஷாஸ்ரீ என்பவரின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. மேக்கப் ஆர்டிஸ்ட் கண்ணன் என்பவர் நயன்தாராவின் தோற்றத்தை மறு உருவாக்கம் செய்திருந்தார்.